தமிழக வாலிபர்கள் 2 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்
பெங்களூருவில் பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தொடர்புடைய தமிழக வாலிபர்கள் 2 பேர் போலீஸ்காரரை கத்தியால் குத்துவிட்டு தப்ப முயன்றனர். அவர்களை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு,
பெங்களூரு பெல்லந்தூர் அருகே சர்ஜாபுரா ரோட்டில் வசித்து வருபவர் 28 வயது பெண். இவர் கடந்த 18-ந் தேதி இரவு தான் வசிக்கும் வீட்டின் அருகே செல்லும் சாலையில் நடந்து சென்றார். அப்போது, அங்கு வந்த மர்மநபர்கள் அவரை காரில் கடத்தினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தகவல் தெரிவித்தனர். உடனடியாக கட்டுப்பாட்டு அறையில் இருந்த போலீஸ்காரர், பெல்லந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே பெல்லந்தூர் போலீசார் ரோந்து வாகனத்தில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆனால், அதற்குள் மர்மநபர்கள் சென்ற கார் மாயமானது.
இதுகுறித்த புகாரின் பேரில் பெல்லந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தவர் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் தமிழக பதிவு எண் எனக்கூறி இருந்ததோடு, அந்த பதிவு எண்ணையும் தெரிவித்து இருந்தார். இதனால் பதிவு எண்ணை கொண்டு கார் உரிமையாளர் யார்? என்பது தொடர்பாக போலீசார் விசாரித்தனர்.
இந்த நிலையில், கடத்தப்பட்ட பெண்ணுக்கு காரில் மர்மநபர்கள் பாலியல் தொல்லை கொடுத்து அவரை கற்பழிக்க முயன்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பெண் கூச்சலிட்டதால் மர்மநபர்கள் கற்பழிப்பு முயற்சியை கைவிட்டுவிட்டு அவரை கசவனஹள்ளியில் காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு சென்றனர். அங்கு அரைகுறை மயக்கத்துடன் கிடந்த பெண், பின்னர் மெல்ல எழுந்து தனது மாமா வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். மேலும், சிகிச்சை பெற்ற பெண்ணிடம் போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர்.
அப்போது, கடத்தல் மற்றும் காரில் நடந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் அவர் தெரிவித்தார். அவர் கொடுத்த விவரங்களை போலீசார் பதிவு செய்து கொண்டனர். போலீசாரிடம் அவர் கூறிய தகவலின் மூலம் கடத்தல் முயற்சியானது திட்டமிட்டு நடத்தப்பட்டது அல்ல, எதேச்சையாக நடந்தது என்பது தெரியவந்தது. மேலும், மருந்து கடைக்கு சென்று வீடு திரும்பி கொண்டிருந்த பெண் ‘லிப்ட்‘ கேட்டு சாலையில் நின்றதும், அவருக்கு யாரும் ‘லிப்ட்‘ கொடுக்காமல் சென்றதும் தெரியவந்தது. இந்த வேளையில் காரில் வந்த மர்மநபர்கள் அவரிடம் ஆபாசமாக சைகை செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த பெண்ணை மர்மநபர்கள் காரில் கடத்தியதும் தெரியவந்தது.
மேலும், சம்பவம் நடப்பதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பு பெண்ணின் தாய், தான் தங்கியிருந்த வீட்டின் முன்னாள் உரிமையாளர் மற்றும் அவருடைய கூட்டாளிகள் மீது கோரமங்களா போலீசில் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தார். இதன் தொடர்ச்சியாக தான் கடத்தல் வழக்கு பதிவாகி இருப்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்த 2 வழக்குகளுக்கும் தொடர்பு உள்ளதா? அல்லது தாயும்-மகளும் சேர்ந்து நாடகமாடுகிறார்களா? எனவும் போலீசார் சந்தேகித்தனர்.
இருப்பினும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரின் பதிவு எண்ணை கொண்டு போலீசார் விசாரித்தனர். இந்த விசாரணையின்போது அந்த காரை 2010-ம் ஆண்டில் தமிழ்நாடு கடலூரை சேர்ந்த ஒருவர் வாங்கி இருந்ததும், தற்போது அந்த கார் 6 பேரிடம் கைமாறி தர்மபுரியை சேர்ந்த ஒருவர் பயன்படுத்தி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து கடத்தல்காரர்களை கைது செய்ய பெங்களூரு மாநகர கிழக்கு மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார், தமிழக போலீசாரின் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த மர்மநபர்கள், தமிழக பதிவு எண் (பெண்ணை கடத்திச் சென்ற பதிவு எண்) கொண்ட காரில் பெல்லந்தூர் அருகே சுற்றுவதாக பெல்லந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்டர் சைமனுக்கு நேற்று முன்தினம் இரவில் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பெல்லந்தூர் பகுதியில் போலீசார் இரும்பு தடுப்பு வேலிகள் அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த வாகன சோதனையில் ஒயிட்பீல்டு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சோமசேகரும் ஈடுபட்டு இருந்தார். காடுசித்தராபுரா செல்லும் சாலையில் போலீசார் சோதனை நடத்தினார்கள்.
அப்போது அங்கு தமிழக பதிவு எண்ணுடன் வந்த அந்த காரை போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால், ஓட்டுனர் காரை நிறுத்தாமல் இரும்பு தடுப்பு வேலியை இடித்து தள்ளியபடி சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், அவர்கள் அந்த காரை போலீஸ் வாகனத்தில் பின்தொடர்ந்து துரத்திச்சென்று குடத்திக்கேட் பகுதியில் மடக்கினார்கள்.
இதனால் காரை நிறுத்திய மர்மநபர்கள் 2 பேரும் அதில் இருந்து இறங்கி ஓடினார்கள். அவர்களை போலீசார் விரட்டி சென்றனர். போலீஸ்காரர் மகாந்தேஷ் முலவாடி என்பவர் அவர்களை பிடிக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த மர்மநபர்களில் ஒருவர் அவரை கத்தியால் குத்திவிட்டு ஓடினார். இன்னொரு நபரும் மற்ற போலீசாரை கத்தியால் குத்திவிடுவதாக மிரட்டினார். இந்த சந்தர்ப்பத்தில், போலீசில் சரண் அடையும்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்டர் சைமன் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
ஆனாலும், மர்மநபர்கள் 2 பேரும் போலீசில் சரண் அடைய மறுத்து போலீசாரிடம் சிக்காமல் இருக்க தப்பி ஓடினார்கள். இதனால், போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்டர் சைமன், சப்-இன்ஸ்பெக்டர் சோமசேகர் ஆகியோர் மர்மநபர்கள் 2 பேரையும் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். குண்டுகள் 2 மர்மநபர்களின் கால்களிலும் பாய்ந்தன.
இதனால், மர்மநபர்கள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் தமிழ்நாடு தர்மபுரியை சேர்ந்த சங்கர்(வயது 25), செல்வகுமார்(26) என்பதும், இவர்கள் 2 பேரும் தான் பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது. இதில், இன்ஸ்பெக்டர் விக்டர் சைமன் துப்பாக்கியில் இருந்து வெளியான குண்டு சங்கர் காலிலும், சப்-இன்ஸ்பெக்டர் சோமசேகர் துப்பாக்கியில் இருந்து வந்த குண்டு செல்வகுமாரின் காலிலும் பாய்ந்தது தெரிய வந்தது.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த சங்கர், செல்வகுமார் மற்றும் கத்திக்குத்தில் காயமடைந்த போலீஸ்காரர் மகாந்தேஷ் முலவாடி ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் கைதானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.