மாநாட்டுக்கு சென்று திரும்பியபோது விபத்து: காயம் அடைந்தவர்களுக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல்
மாநாட்டுக்கு சென்று திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் காயம் அடைந்தவர்களை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஈரோடு,
ஈரோடு மண்டல தி.மு.க. மாநாடு பெருந்துறை அருகே சரளையில் கடந்த 2 நாட்கள் நடைபெற்றது. கடந்த 24-ந் தேதி நடந்த முதல்நாள் மாநாட்டுக்கு கொடுமுடியில் இருந்து தி.மு.க.வினர் சுமார் 20 பேர் ஒரு வேனில் சென்றனர். அங்கிருந்து மதியம் 3 மணிஅளவில் அவர்கள் மீண்டும் கொடுமுடிக்கு திரும்பினார்கள். பெருந்துறை ஆர்.எஸ்.ரோட்டில் கொம்மகோவில் பஸ் நிறுத்தம் பகுதியில் வேன் சென்றபோது, அங்கு நின்றுகொண்டு இருந்த கோபிசெட்டிபாளையத்தை அடுத்த கள்ளிப்பட்டி அருகே உள்ள எரங்காட்டூரை சேர்ந்த அஜய் விக்ரம் (வயது 10) மீது வேன் எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அஜய் விக்ரம் படுகாயம் அடைந்தார். மேலும், மோதிய வேகத்தில் வேன் சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்த வெங்கம்பூர் முன்னாள் கவுன்சிலர் துரைசாமி (58), எல்லையூரை சேர்ந்த பழனியப்பன் (51), கொடுமுடியை சேர்ந்த குணசேகரன் (56), மூர்த்தி (17) உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு ஈரோட்டில் உள்ள பல்வேறு தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் விபத்தில் படுகாயம் அடைந்து பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த துரைசாமி, மூர்த்தி, பழனியப்பன், குணசேகரன், அஜய்விக்ரம் ஆகியோரை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரத்தையும் அவர் வழங்கினார். அப்போது அவருடன் கட்சியின் துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி உள்பட பலர் உடனிருந்தனர்.