நடத்தையில் சந்தேகப்பட்டு கையை கட்டி, வாயில் துணியை திணித்து மனைவியை வெட்டிக்கொன்ற வாலிபர்
திருத்துறைப்பூண்டி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் கையை கட்டி, வாயில் துணியை வைத்து திணித்து கொடூரமாக வெட்டி கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.
திருத்துறைப்பூண்டி,
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எழிலூர் ஊராட்சியை சேர்ந்த வீராசாமி மகன் அய்யப்பன் (வயது 32). இவர் முன்பு சாராயம் விற்பனை செய்து வந்தார். இவர் மீது திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் பல்வேறு சாராய வழக்குகள் இருந்தன. இவருக்கும், நத்தப்பள்ளத்தை சேர்ந்த ஆரோக்கியமேரிக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இனிலையா என்ற பெண் குழந்தையும், சிவபாலன் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில் அய்யப்பன், கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு எழிலூர் சமத்துவபுரத்தை சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி சத்யாவை(19) காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு சத்யாவின் பெற்றோர் ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சில நாட்கள் கழிந்த பின்னர் சமாதானம் அடைந்தனர். சத்யாவிற்கு இனியா என்ற பெண் குழந்தையும், சத்யன் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.
திருமணம் ஆன சில நாட்கள் வரையில் அய்யப்பன்-சத்யா திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றது. பின்னர் சத்யாவிற்கும், அய்யப்பனுக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்தது. அய்யப்பன் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து சத்யாவை துன்புறுத்தியதாக தெரிகிறது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சத்யா ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில், தனது கணவர் அய்யப்பன், தனது நடத்தையில் சந்தேகப்பட்டு துன்புறுத்துவதாக கூறி இருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் அகிலாண்டேஸ்வரி, சப்-இன்பெக்டர் சகுந்தலா ஆகியோர் அய்யப்பனிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது போலீசாரிடம் அய்யப்பன், தான் இனிமேல் தனது மனைவியை சந்தேகப்பட்டு துன்புறுத்த மாட்டேன், குடிக்க மாட்டேன், ஒழுங்காக குடும்பம் நடத்துவேன் என உறுதியளித்தார். இதை நம்பிய சத்யா, தனது கணவர் திருந்தி விட்டதாக நினைத்து போலீஸ் நிலையத்தில் தனது கணவர் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்று சென்றார்.
இந்த நிலையில் தனது மனைவியை நைசாக பேசி மணலியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு அய்யப்பன் நேற்று முன்தினம் அழைத்து சென்றுள்ளார். அன்று இரவு அவர்கள் அங்கு தங்கினர். நள்ளிரவு 2 மணியளவில் எழுந்த அய்யப்பன், தனது மனைவி சத்யாவின் வாயில் துணியை வைத்து அமுக்கி, கைகளை பின்னால் கட்டி உள்ளார். பின்னர் அரிவாளால் சத்யாவின் தலை உள்பட உடம்பின் பல பகுதிகளை வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளார். இதில் அந்த இடத்திலேயே சத்யா ரத்த வெள்ளத்தில் பிணமானார்.
இந்த கொலை சம்பவம் பற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி, இன்ஸ்பெக்டர் ஆனந்த பத்மநாதன், சப்-இன்ஸ்பெக்டர் கபிலன் ஆகியோர் அந்த பகுதியில் மறைந்து இருந்த அய்யப்பனை கைது செய்தனர்.
பின்னர் சத்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கணவனே கொடூரமாக வெட்டிக்கொன்ற சம்பவம் திருத்துறைப்பூண்டி பகுதியில் பெரும் பரப்பரப்பை எற்படுத்தியுள்ளது.