அடுத்து வரும் தேர்தல்களில் ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி

அடுத்துவரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும் என சரத்பவார் பேசினார்.

Update: 2018-03-25 23:47 GMT
பால்கர்,

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்ப வார் பால்கர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்தித்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் பால்கரில் நடை பெற்ற கட்சி பொதுக்கூட்டத் தில் பேசிய அவர், வருகிற நாடாளுமன்ற மற்றும் சட்ட மன்ற தேர்தல்களில் ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்கும் என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து புல்லட் ரெயில் திட்டம் மற்றும் சாலை அமைக்கும் திட்டத் தை விமர்சித்த அவர், பா.ஜனதா ஆட்சியில் விவசாய நிலங்கள் வளர்ச்சி என்ற பெயரில் கையகப் படுத்தப்படுவதாக குற்றம் சாட்டினார். மேலும், மாநிலத் தின் வளர்ச்சி திட்டங்களை வரவேற்பதில் தேசியவாத காங்கிரசுக்கு தயக்கம் இல்லை எனவும், அந்த வளர்ச்சி விவசாயம் மற்றும் உள்நாட்டு தொழில்களை பாதிப்பதையே எதிர்க்கிறோம் எனவும் கூறினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடனான அவரது சமீபத்திய சந்திப்பில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளர் குறித்து இருவரும் பேசிக்கொண் டதாக கூறப்படுவது குறித்து கருத்து தெரிவித்த அவர், ராகுல் காந்தியுடன் தான் பிரதமர் வேட்பாளர் குறித்து எதுவும் பேசவில்லை என மறுத்தார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்த தேசியவாத காங்கிரஸ் கட்சி கடந்த மராட்டிய சட்டமன்ற தேர்தலில் தனித்து தேர்தலை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்