நரேந்திர மோடி ஆட்சியில் முஸ்லிம் பெண்கள் முன்னேற்றம் அடைந்து உள்ளனர்

நரேந்திர மோடி ஆட்சி யில் முஸ்லிம் பெண்கள் முன்னேற்றம் கண்டு இருப்பதாக மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.

Update: 2018-03-25 23:40 GMT
மும்பை,

பன்வெல்லில் உள்ள ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி பேசியதாவது:-

பிரதமர் மோடி தனது நிர் வாக திறனால் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை சாத்தியப்படுத்தி உள்ளார். கடந்த அரசின் மோசமான நிர்வாகத்தால் சரிந்து போயி ருந்த இந்திய பொருளா தாரத்தை தனது சிறப்பான திட்டங்களின் மூலம் வலு வான உலக பொருளாதாரமாக இந்த அரசு மேம்படுத்தி இருக் கிறது.

நாட்டில் ஊழல் கட்டுப் படுத்தப்பட்டு வளர்ச்சி திட்டங்கள் விரைவாக நடை பெற்று வருகின்றன. விவசாயி கள், பெண்கள், ஏழை மக்கள் மற்றும் வாலிபர்கள் என அனைவரது வளர்ச்சியையும் இந்த அரசு உறுதிப்படுத்தி உள்ளது. முஸ்லிம் சிறுமிகள் பள்ளிப்படிப்பை கைவிடுவது 70 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால் முஸ்லிம் பெண் களிடையே குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் சிலர் தங்களது அரசியல் ஆதாயங் களுக்காக வேண்டுமென்றே அரசின் திட்டங்களை கேலி செய்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்