தந்தை அடித்துக்கொலை மகன் கைது
திருத்தணி அருகே தந்தையை அடித்துக்கொலை செய்த வழக்கில் மகன் கைது செய்யப்பட்டார்.
திருத்தணி,
திருத்தணி அருகே உள்ள நெமிலி காலனியை சேர்ந்தவர் தேவகுமார் (வயது 45). இவரது மகன் தாவித் என்ற டேவிட்ராஜ் (20). தேவகுமாரின் தந்தை அமாவாசை (65). இவர்கள் 3 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தார்கள். தேவகுமார் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். இதனால் தேவகுமாருக்கும், அவரது மகன் டேவிட்ராஜுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் மது குடித்துவிட்டு வந்த தேவகுமாருக்கும், டேவிட் ராஜுக்கும் தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து டேவிட்ராஜ் தனது தந்தையை கயிற்றால் கட்டி வீட்டில் உள்ள அறையில் வைத்து விட்டு வெளியே சென்று விட்டார்.
அப்போது அங்கு வந்த அமாவாசை தனது மகன் தேவகுமார் கட்டி போடப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்து அவரது கட்டுகளை அவிழ்த்து விட்டார். அப்போது அங்கு வந்த டேவிட்ராஜை பார்த்த தேவகுமார் அங்கு இருந்த கத்தியை எடுத்து டேவிட்ராஜை வெட்ட வந்தார். உடனே டேவிட்ராஜ் உருட்டுகட்டையால் தேவகுமாரை தாக்கினார். இதில் தேவகுமார் படுகாயம் அடைந்தார். அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு தேவகுமார் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துபோனார். இது குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.