முதியவரின் உடலை அடக்கம் செய்ய வீடு, வீடாக பணம் வசூலித்த கிராம மக்கள்
வேடசந்தூர் அருகே முதியவரின் உடலை அடக்கம் செய்ய வீடு, வீடாக கிராம மக்கள் பணம் வசூலித்தனர்.
வேடசந்தூர்,
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை சேர்ந்தவர் முத்து (வயது 72). அவருடைய மனைவி நாகமணி (60). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இவர்கள் 2 பேரும், ஆந்திராவில் கடந்த 25 வருடங்களாக தங்கியிருந்து கல் உடைக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் வயது முதிர்வு காரணமாக கடினமாக பணி செய்யமுடியவில்லை.
இதையடுத்து அவர்கள் சொந்த ஊரான வடமதுரைக்கு வந்தனர். வயதான தம்பதியினருக்கு உறவினர்கள் யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. வேடசந்தூரில், தம்மணம்பட்டி செல்லும் சாலையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். முத்துவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டது.
இதனால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று முன்தினம் மாலை திடீரென இறந்துவிட்டார். இதுகுறித்து முத்துவின் உறவினர் களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் உதவி செய்ய யாரும் முன்வரவில்லை. கணவரின் உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாததால் நாகமணி கண்ணீர் வடித்தார்.
இதையடுத்து அவர், அக்கம்பக்கத்தினரிடம் உதவி செய்யுமாறு கேட்டுள்ளார். இதையடுத்து அப்பகுதி மக்கள் வீடு, வீடாக சென்று பணம் வசூல் செய்து முத்துவை இழந்து வாடும் அவரது மனைவி நாகமணிக்கு கொடுத்தனர். இதுகுறித்து வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பரமசிவத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் முதியவரின் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தார். அவருடைய உத்தரவின் பேரில், பேரூராட்சி பணியாளர்கள் துணையோடு மயானத்தில் குழிதோண்டி முத்துவின் உடலை அப்பகுதி மக்கள் அடக்கம் செய்தனர்.
இந்நிலையில் கணவனை இழந்து தவித்து வரும் நாகமணிக்கு மாவட்ட நிர்வாகம் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட அரசு நலத்திட்டங்கள் பெற்றுத்தரவோ அல்லது முதியோர் இல்லத்தில் சேர்க்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.