மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர தொடர்ந்து பாடுபடுவோம் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வர தொடர்ந்து பாடுபடுவோம் என்று மதுரையில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.
மதுரை,
ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி மதுரை ரிங் ரோடு அம்மா திடலில் ஜெயலலிதா பேரவை சார்பில் வருகிற 30-ந்தேதி 100 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடக்கிறது. இதில் பங்கேற்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. விமான நிலையம் முதல் விழா திடல் வரை ஜெயலலிதா பேரவை சார்பில் 50 ஆயிரம் பேர் சீருடை அணிந்து அணிவகுத்து நின்று வரவேற்பு கொடுக்கிறார்கள்.
இந்த அணிவகுப்பு பயிற்சி குறித்த ஆலோசனை கூட்டம் ரிங் ரோடு அம்மா திடலில் நேற்று நடைபெற்றது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், கடம்பூர் ராஜூ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:- தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்க தொடர்ந்து போராடி வருகிறோம். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க மத்திய அரசு 5 இடங்களை தேர்வு செய்தது.
தேர்வு செய்த 5 இடங்களில் எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்பதை மத்திய அரசு இது வரை அறிவிக்கவில்லை. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய தொடர்ந்து பாடுபடுவோம். என்றார்.