காட்பாடி அருகே கரிமூட்டைகள் ஏற்றிச் சென்ற லாரியில் ‘திடீர்’ தீ
காட்பாடி அருகே கரிமூட்டைகள் ஏற்றிச்சென்ற லாரியில் தீப்பிடித்தது. டிரைவரின் சாமர்த்தியத்தால் லாரி எரிவது தடுக்கப்பட்டது.
காட்பாடி,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இருந்து ஆந்திரமாநிலம் ரேணிகுண்டாவுக்கு அடுப்புக்கரி ஏற்றிக்கொண்டு வேலூர் வழியாக ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி காட்பாடியை கடந்து கல்புதூர் சோதனை சாவடி அருகே சென்றபோது லாரியில் இருந்த அடுப்புக்கரி மூட்டையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்து விட்டு லாரியை அருகே உள்ள மைதானத்துக்கு கொண்டு சென்றார். கரிமூட்டைகள் தீப்பிடித்து நாசமடைவதை தடுக்க அங்கிருந்தவர்கள் உதவியுடன் அவற்றை கீழே இறக்கும் பணியில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் அங்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் பரிமளாதேவி தலைமையிலான வீரர்கள் லாரி மீது தண்ணீரை பீய்ச்சி அடித்ததோடு எரிந்து கொண்டிருந்த கரிமூட்டைகள் மீதும் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். எனினும் சில கரிமூட்டைகள் நாசமாகி விட்டது.
அதிகப்படியான வெப்பத்தின் காரணமாக அடுப்புக்கரி தீப்பிடித்து எரிந்துள்ளது என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டிரைவரின் சாமர்த்தியத்தால் லாரி எரியாமல் தப்பியது.