வரதட்சணை கொடுமையால் விஷம் தின்று இளம்பெண் தற்கொலை கணவன் மீது வழக்குப்பதிவு
பட்டுக்கோட்டை அருகே வரதட்சணை கொடுமையால் விஷம் தின்று இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது கணவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பட்டுக்கோட்டை,
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அணைக்காடு பிரதான சாலை தெருவை சேர்ந்தவர் பீட்டர்தனராஜ். இவருடைய மனைவி புனிதா. இவர்களது மகள் ஜெய்ரீன்(வயது30). ஜெய்ரீக்கும் வேலூர் மாவட்டம் கரிவேடு பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவருக்கும் கடந்த 2015–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2–ந் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின் போது ஜெயக்குமார் குடும்பத்தினர் கேட்ட சீர்வரிசை பொருட்களை ஜெய்ரீன் குடும்பத்தினர் கொடுத்தனர். திருமணத்துக்கு பின் ஜெயக்குமாரும், ஜெய்ரீனும்
அமெரிக்காவுக்கு சென்று விட்டனர். இந்தநிலையில் ஜெயக்குமார் கூடுதல் வரதட்சணை கேட்டு ஜெய்ரீனை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஜெய்ரீன் அமெரிக்காவில் இருந்து தனது சொந்த ஊருக்கு வந்து தனது தாய், தந்தையுடன் தங்கி இருந்தார்.
வழக்குப்பதிவு
இந்தநிலையில் கணவர் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதால் மிகுந்த மனவேதனையில் இருந்த ஜெய்ரீன் சம்பவத்தன்று எலி மருந்தை (விஷம்) தின்றார். இதனால் மயங்கி விழுந்த அவரை சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெய்ரீன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஜெய்ரீனின் தாயார் புனிதா பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தார். இந்த புகாரில் வரதட்சணை கொடுமை காரணமாக தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறி உள்ளார். இதன்பேரில் போலீசார் ஜெயக்குமார் மீது வரதட்சணை கொடுமை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜெய்ரீனுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே கடந்துள்ளதால் பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் கோவிந்தராசு விசாரணை நடத்தி வருகிறார்.