சத்துணவு சமையலர் கழுத்தை அறுத்து கொலை கணவருக்கு வலைவீச்சு
திருக்காட்டுப்பள்ளி அருகே கழுத்தை அறுத்து சத்துணவு சமையலர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது கணவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருக்காட்டுப்பள்ளி,
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள இந்தளூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். விவசாயி. இவருடைய மனைவி மலர்க்கொடி(வயது 47). இவர்களுக்கு 3 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர். மலர்க்கொடி இந்தளூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி சத்துணவு மையத்தில் சமையலராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் மலர்க்கொடி பள்ளிக்கு சென்று சமையல் வேலை செய்தார். பள்ளியில் வேலை முடிந்த பின் மலர்க்கொடியை அவரது கணவர் பன்னீர்செல்வம் அழைத்து சென்றார்.
கழுத்தை அறுத்து கொலை
இந்த நிலையில் நேற்று காலை இந்தளூர் அரசு உயர்நிலைப்பள்ளி பின்புறம் உள்ள கருவேல மரங்கள் நிறைந்த வயல்வெளியில் ஒரு பெண் பிணமாக கிடந்தார். இதைக்கண்ட பொதுமக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு அன்பழகன், பூதலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகாற் சோழன், சப்-இன்ஸ்பெக்டர் கபீர்தாசன் ஆகியோர் பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பிணமாக கிடந்த பெண் சத்துணவு சமையலர் மலர்க்கொடி என்றும் அவர் தலையில் கட்டையால் தாக்கப்பட்டும், கழுத்தை அறுத்தும் கொல்லப்பட்டது தெரியவந்தது. சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடித்தது. மோப்பநாய் இந்தளூர் பஸ் நிலையம் வரை சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
கணவருக்கு வலைவீச்சு
மலர்க்கொடி உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-
பன்னீர்செல்வத்துக்கும் அவரது மனைவி மலர்க் கொடிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பன்னீர் செல்வம் தனது மனைவியை கொலை செய்ய திட்ட மிட்டுள்ளார். இதன்படி அவர் மலர்க்கொடியை அருகே உள்ள கருவேலங்காட்டுக்கு அழைத்து சென்று அங்கு வைத்து தனது மனைவியின் தலையில் கட்டையால் தாக்கியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்து உள்ளார். பின்னர் அவர் அங்கிருந்து தலைமறைவாகி விட்டார். இது குறித்து பூதலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பன்னீர்செல்வத்தை வலைவீசி தேடி வருகிறார்கள்.