திருச்சி முக்கொம்பில் காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு
நண்பர்களுடன் திருச்சி முக்கொம்புக்கு சுற்றுலா வந்த போது, காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
ஜீயபுரம்,
அரியலூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் அரியலூர் பஸ்நிலைய பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஆனந்த் பாபு (வயது 21). இவர் அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் இறுதி ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் இவர் தன்னுடன் படிக்கும் நண்பர்களுடன் திருச்சி அருகே உள்ள முக்கொம்பு சுற்றுலா மையத்துக்கு நேற்று மதியம் வந்தார்.
முக்கொம்பு அணையையொட்டி தேங்கி கிடந்த முழங்கால் அளவு தண்ணீரில் ஆனந்த்பாபு, அவரது நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தார். இந்நிலையில் ஆனந்த் பாபு மட்டும் விலகி சற்று தொலைவில் ஆழமான பகுதிக்கு சென்று குளித்தார். இந்நிலையில் அவர் தண்ணீரில் மூழ்கி, மூழ்கி கையை மட்டும் அசைத்துள்ளார். இதைபார்த்த நண்பர்கள் அவர் விளையாடுகிறார் என்று நினைத்துவிட்டனர். ஆனால் அவர் தண்ணீரில் மூழ்கி காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என சைகை காண்பித்துள்ளார். இதனிடையே சிறிதுநேரம் கழித்து நண்பர்கள், ஆனந்த் பாபு குளித்து கொண்டிருந்த இடத்துக்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு அவரை காணவில்லை. அப்போதுதான் ஆனந்த்பாபு தண்ணீரில் மூழ்கி இருக்கலாம் என சந்தேகம் அடைந்தனர்.
இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள், மீனவர்கள் உதவியுடன் ஆனந்த் பாபுவை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதன் பின் திருச்சி கண்டோன்மென்ட் தீயணைப்பு நிலையத்துக்கும், ஜீயபுரம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றுக்குள் இறங்கி தேடினர். அப்போது, ஆனந்த்பாபு ஆற்றுக்குள் மூழ்கி இறந்தது தெரிய வந்தது. தீயணைப்பு வீரர்கள் ஆனந்த் பாபு உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவர் உடலை பார்த்து உடன் வந்திருந்த அவரது கல்லூரி நண்பர்களும், தோழிகளும் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. அப்போது ஒரு மாணவி திடீரென மயங்கி விழுந்தார். சக நண்பர்கள் அவருக்கு முதலுதவி அளித் தனர்.
இதனையடுத்து ஆனந்த் பாவுவின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக ஜீயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.