தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை அன்புமணியால் தான் நிரப்ப முடியும் ஜி.கே.மணி பேச்சு
தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை அன்புமணியால் தான் நிரப்ப முடியும் என்று அரகண்டநல்லூரில் நடந்த கூட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியின் பா.ம.க. பொதுக்குழு கூட்டம் அரகண்டநல்லூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பாலசக்தி தலைமை தாங்கினார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் கோ.தன்ராஜ், மாநில துணை பொதுச்செயலாளர் தங்க.ஜோதி, மாநில அமைப்பு செயலாளர் செல்வக்குமார், மாநில துணைத்தலைவர் சா.மணிகண்டன், மாவட்ட தலைவர் வெங்கடாஜலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற பொறுப்பாளர் வடிவேலன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் குமரகுருபரன், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் சீனுக்கவுண்டர், தலித்.சப்தகிரி ஆகியோர் தொடக்க உரையாற்றினர்.
சிறப்பு அழைப்பாளராக கட்சியின் தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை டாக்டர் அன்புமணி ராமதாசால் தான் நிரப்ப முடியும். அவரது முற்போக்கு சிந்தனைக்கு அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. பா.ம.க ஆட்சிக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை. இதனை உணர்ந்து கட்சி நிர்வாகிகள் பணியாற்றவேண்டும். கட்சியில் தற்போது நடைபெற்று வரும் உறுப்பினர் சேர்க்கை பணியை நிர்வாகிகள் அனைவரும் தீவிரமாக செய்யவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட அமைப்பு செயலாளர் சக்திவேல், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் செந்தில் குமார், மாவட்ட சட்ட பாதுகாப்பு குழு செயலாளர் வக்கீல் ராஜ்குமார், மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் சுடரொளி சுந்தர், உழவர் பேரியக்க செயலாளர் சிவஜோதி, துணை செயலாளர்கள் டெல்லிசேகர், முருகன், துணை தலைவர்கள் சுப்புராஜ், மூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மூர்த்தி, ராமகிருஷ்ணன், பாக்கியராஜ், ஒன்றிய செயலாளர்கள் ஆனந்தன், பாஸ்கரன், சரண்ராஜ், குபேந்திரன், சிவராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தொகுதி அமைப்பு செயலாளர் சுவிஜி.சரவணக்குமார் வரவேற்றார். முடிவில் நகர செயலாளர் முருகன் நன்றி கூறினார்.