டெல்லியில் நாளை நடக்க இருக்கும் சசிகலாபுஷ்பா திருமணத்துக்கு தடை, மதுரை குடும்பநல கோர்ட்டு உத்தரவு
டெல்லியில் நாளை நடப்பதாக இருக்கும் சசிகலாபுஷ்பா திருமணத்திற்கு தடை விதித்து மதுரை குடும்பநல கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
சசிகலாபுஷ்பா எம்.பி.க்கும், அவருடைய கணவர் லிங்கேஸ்வரதிலகனுக்கும் விவாகரத்து வழங்கி, டெல்லி கோர்ட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது.
இதனையடுத்து ராமசாமி என்பவரை 2-வதாக திருமணம் செய்ய சசிகலாபுஷ்பா முடிவு செய்து இருப்பதாகவும், அவர்களின் திருமணம் வருகிற 26-ந் தேதி டெல்லியில் நடக்க உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின.
இந்த நிலையில் மதுரை மாகாளிப்பட்டியைச் சேர்ந்த சத்தியப்பிரியா என்பவர், மதுரை குடும்பநல கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனக்கும், ராமசாமிக்கும் கடந்த 10.12.2014 அன்று திருமணம் நடந்தது. அப்போது 100 பவுன் தங்கநகை, சீர்வரிசையாக ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொடுக்கப்பட்டன. திருமணத்தின்போது ராமசாமி நீதிபதியாக இருப்பதாகவும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அகாடமி நடத்தி வருவதாகவும், அவரது பெயரில் 9 கல்லூரிகள் உள்ளதாகவும் கூறி என்னை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த அடுத்த நாளே என்னை டெல்லிக்கு அழைத்துச் சென்றார்.
ஏற்கனவே அவருக்கு திருமணம் நடந்து 9 வயதில் பெண் குழந்தை உள்ளதை மறைத்து என்னை திருமணம் செய்து கொண்டார். சில நாட்களிலேயே என்னை கொடுமைப்படுத்தினார். பின்னர் எங்களுக்கு ரிதுசனா என்ற பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் எனது கணவரும், சசிகலாபுஷ்பா என்பவரும் டெல்லியில் வருகிற 26-ந் தேதி திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. விசாரித்ததில் அது உண்மை என தெரியவருகிறது. எனக்கும், எனது கணவருக்கும் சட்டப்படி விவாகரத்து ஆகும் வரை சசிகலாபுஷ்பாவையோ, வேறு பெண்ணையோ ராமசாமி திருமணம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருக்கிறார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேங்கடவரதன், “இந்த வழக்கின் விசாரணை முடியும் வரை ராமசாமி வேறு பெண்ணை திருமணம் செய்யக்கூடாது” என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.