புற்றுநோய் பாதித்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய போலீசார்

மும்பை முல்லுண்டு பகுதியை சேர்ந்த சிறுவன் அஷிஷ் மண்டல்(வயது6). இவன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறான். இதற்காக அவன் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான்.

Update: 2018-03-23 23:49 GMT
மும்பை,

சிறுவனுக்கு போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பது விருப்பம். இதையறிந்த ஒரு தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சிறுவனின் ஆசையை நிறைவேற்ற முன்வந்தனர்.

இதையடுத்து அவர்கள் முல்லுண்டு போலீஸ் நிலைய சீனியர் இன்ஸ்பெக்டரிடம் சிறுவனின் ஆசையை தெரிவித்தனர். அவர் முல்லுண்டு போலீஸ் நிலையத்தில் ஒருநாள் இன்ஸ்பெக்டராக சிறுவனை அமர்த்துவதற்கு சம்மதம் தெரிவித்தார். இதன்படி சிறுவன் அஷிஷ் மண்டல் நேற்று போலீஸ் இன்ஸ்பெக்டர் சீருடையில் முல்லுண்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டான். அங்கு போலீசார் அவனுக்கு சல்யூட் அடித்து வரவேற்று இன்ஸ்பெக்டர் இருக்கையில் அமர வைத்து அவனது விருப்பத்தை நிறைவேற்றினர். இதை பார்த்து மகிழ்ச்சியில் கண் கலங்கிய சிறுவனின் பெற்றோர் போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்