குறிஞ்சிப்பாடி அருகே சேலையால் கழுத்தை இறுக்கி பெண் கொலை
குறிஞ்சிப்பாடி அருகே சேலையால் கழுத்தை இறுக்கி பெண் கொலை செய்யப்பட்டார். நடத்தையில் சந்தேகப்பட்டு, வெறிச்செயலில் ஈடுபட்ட அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
குறிஞ்சிப்பாடி,
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள டி.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தேசிங்கு மகன் தரணிசிங்(வயது 42), விவசாயி. இவருடைய மனைவி சுமதி(36). இவர்களுக்கு சோபனா(11), ஜெகதீஸ்வரி(9), சஞ்சய்(5) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். குறிஞ்சிப்பாடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சோபனா 6-ம் வகுப்பும், ஜெகதீஸ்வரி 3-ம் வகுப்பும், சஞ்சய் எல்.கே.ஜி.யும் படித்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களாக சுமதியின் நடத்தை மீது தரணிசிங்கிற்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே தரணிசிங்கிற்கு சொந்தமான 2 ஏக்கர் விவசாய நிலத்தையும், ஒரு பொக்லைன் எந்திரத்தையும் தனது பெயருக்கு எழுதி தருமாறு சுமதி கேட்டுள்ளார். அதன்படி தரணிசிங், நிலத்தை தனது மனைவி பெயருக்கு மாற்றிக்கொடுத்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சுமதி தனது கணவருடன் கோபித்துக் கொண்டு, குழந்தைகள் 3 பேரையும் வீட்டில் விட்டுவிட்டு கஞ்சமநாதன்பேட்டையில் உள்ள தனது தாய் குப்பாயி வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த தரணிசிங், சுமதியை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி சுமதியை நேற்று முன்தினம் செல்போன் மூலம் தொடர்பு கொண்ட தரணிசிங், 2-வது மகள் ஜெகதீஸ்வரிக்கு உடல்நலம் சரியில்லை, உடனே வருமாறு கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
இதனால் பதறியடித்துக்கொண்டு சுமதி மொபட்டில் டி.பாளையத்துக்கு புறப்பட்டார். டி.பாளையம் ஏரிக்கரையில் வந்த சுமதியை வழிமறித்து தரணிசிங் தாக்கினார். இதில் மயங்கி விழுந்த சுமதியை சேலையால் கழுத்தை இறுக்கி தரணிசிங் கொலை செய்தார். பின்னர் அவர் அங்கிருந்து சென்று விட்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் குள்ளஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சுமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சுமதியின் தாய் குப்பாயி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தரணிசிங்கை தேடி வந்தனர். இது பற்றி அறிந்ததும் தரணிசிங் டி.பாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகத்திடம் நேற்று சரண் அடைந்தார். இதையடுத்து அவர், குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தரணிசிங்கை போலீசார் கைது செய்தனர்.