மணல் கடத்திய டிராக்டர், டிப்பர் லாரி பறிமுதல்

அரக்கோணத்தில் மணல் கடத்திய டிராக்டர், டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2018-03-23 20:53 GMT
அரக்கோணம்,

அரக்கோணம் தாசில்தார் பாபு, மண்டல துணை தாசில்தார் சரவணமுத்து மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் தக்கோலம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது 
தக்கோலம் ஆற்றுப்பகுதியில் இருந்து மணல் கடத்தி சென்ற டிராக்டரை பறிமுதல் செய்து தக்கோலம் போலீசில் ஒப்படைத்தனர்.

இதேபோல் காவனூர் பகுதியில் ஏரி மண் எடுத்து சென்ற டிப்பர் லாரியை மடக்கி பிடித்து அரக்கோணம் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்