குறை தீர்க்கும் கூட்டம்: அனைத்து பயிர்களுக்கும் இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
அனைத்து பயிர்களுக்கும் பாரபட்சம் இன்றி இழப்பீட்டுத்தொகை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
விருதுநகர்,
விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அதிகாரிஆனந்தகுமார் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் கலந்து கொள்ளாதது ஏன் என்று விவசாயிகள் கேட்டதற்கு, அரசு துறை செயலாளர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள கலெக்டர் சென்றுள்ளதாகவும், அதனால் தான் கூட்டத்தில் கலந்து கொள்ள இயலவில்லை என்றும் மாவட்ட வருவாய் அதிகாரி தெரிவித்தார். கூட்டத்தில் முக்கிய பிரச்சினையாக பயிர் இழப்பீட்டுத்தொகை வழங்காதது குறித்து பேசப்பட்டது.
கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பலரும், இழப்பீட்டுத்தொகை பாதிக்கப்பட்டஅனைத்து விவசாயிகளுக்கும் முழுமையாக வழங்கப்படவில்லை என்றும், நெற்பயிர் தவிர பிற பயிர்களுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும் என கடந்த மாத விவசாயிகள் குறை தீர்க்கும் நாள்கூட்டத்தில் சுட்டிக்காட்டிய பின்னரும், இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினர். மேலும் இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் விவசாயிகள் புகார் கூறினர்.
இதற்கு பதில் அளித்து பேசிய மாவட்ட வருவாய் அதிகாரி ஆனந்தகுமார், இழப்பீட்டுத்தொகை வழங்குவது குறித்து அதிகாரிகள் குழு சென்னை சென்று உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி உள்ளதாகவும், பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். விவசாயிகளுக்கு இழப்பீட்டுத்தொகையினை ஒரு மாத காலத்திற்குள் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். விவசாயிகள் பலர் இது தொடர்பான கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கொடுத்தனர்.
மேலும் மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் தனி நபர்கள் சவடுமண் அள்ள அனுமதி பெற்றுவிட்டு, ஆற்று மணலை அள்ளுவதாகவும் குறிப்பிட்ட பகுதியில் அள்ளாமல் பிறபகுதியில் உள்ள சவடு மண்ணையும் அள்ளிச் செல்லும் நிலை உள்ளதால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது என்றும் விவசாய சங்க தலைவர் விஜயமுருகன் தெரிவித்தார்.
மேலும் விதிமுறைகளை மீறி சவடு மண் அள்ளுவதை தடுக்க கலெக்டர் உத்தரவிட்ட பின்னரும் தொடர்ந்து மண் அள்ளப்படுவதாக விவசாயிகள் புகார் கூறினர். இது பற்றி ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய் அதிகாரி தெரிவித்தார். மேலும் விவசாயிகள் கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்வதாகவும் அவர் உறுதி அளித்தார்.