கனிம வளங்கள் கடத்தல் மற்றும் சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து வாட்ஸ்-அப் மூலம் புகார் தெரிவிக்கலாம்

கனிம வளங்கள் கடத்தல் மற்றும் சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து வாட்ஸ்-அப் மூலம் புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் லதா தெரிவித்துள்ளார்.

Update: 2018-03-23 22:30 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட கலெக்டர் லதா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் குடிநீர் வினியோகம், மின் வினியோகம், கனிம வளங்கள் கடத்தல் மற்றும் சட்டம், ஒழுங்கு பிரச்சினை போன்றவை தொடர்பாக பொதுமக்கள் தங்கள் புகார்களை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவோ அல்லது 89033 31077 என்ற செல்லிடப்பேசி வாயிலாகவோ தெரிவிக்கலாம்.

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மீது உடனுக்குடன் உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு வசதியாக பல்துறை அலுவலர்கள் அடங்கிய அலுவலர் குழு கலெக்டர் அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் 89033 31077 என்ற செல்பேசி எண்ணில் வாட்ஸ்-அப் செயலி மூலமாகவும் குறைகளை தெரிவித்து உடனுக்குடன் தீர்வு காணலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்