போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாக நடிகர் தனுஷ் மீது நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி
போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாக, நடிகர் தனுஷ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை,
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் கதிரேசன். இவர், நடிகர் தனுஷ் தன் மகன் தான் என்றும், தனக்கும் தன்னுடைய மனைவி மீனாட்சிக்கும் தனுஷ் மாதந்தோறும் பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மேலூர் கோர்ட்டில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இதை எதிர்த்து தனுஷ் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணையின்போது, இருதரப்பினரும் நடிகர் தனுஷ் யாருடைய மகன் என்பதற்கு ஆதாரங்களாக பிறப்பு சான்றிதழ், பள்ளி மாற்றுச்சான்றிதழ் ஆகியவற்றை தாக்கல் செய்ய கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. அதன்பேரில் இருதரப்பினரும் வெவ்வேறு பள்ளி மாற்றுச் சான்றிதழை தாக்கல் செய்தனர். விசாரணை முடிவில் மேலூர் கோர்ட்டில் தனுசுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்நிலையில், ஐகோர்ட்டில் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பள்ளி மாற்றுச்சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் போலியானவை. எனவே அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை மாநகர போலீசில் கதிரேசன் புகார் மனு அளித்தார். அந்த மனு மீது இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.
எனவே, அதே கோரிக்கையை வலியுறுத்தி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கலாமா, வேண்டாமா என்பதை பரிசீலித்து உத்தரவிட நீதிபதி ராஜமாணிக்கம் விசாரிக்கும் வழக்குகளில் ஒன்றாக பட்டியலிடப்பட்டது.
இதுதொடர்பாக நீதிபதி நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
“மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு தொடர்பாக இந்த கோர்ட்டு விசாரிக்கத் தேவையில்லை. தேவைப்படும்பட்சத்தில் மனுதாரர் சிவில் கோர்ட்டை நாடலாம். இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.“
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.