வாஷி கழிமுக பாலத்தில் கார் மீது லாரி மோதி 2 டிரைவர்கள் படுகாயம்
வாஷி கழிமுக பாலத்தில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 2 டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர். இதுபோல அங்கு நடந்த மற்றொரு விபத்தில் 5 வாகனங்கள் சேதம் அடைந்தன.
மும்பை,
மும்பையில் இருந்து பன்வெல் நோக்கி நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் கார் ஒன்று புறப்பட்டது. இந்த கார் 12.30 மணியளவில் மும்பை- பன்வெல் நெடுஞ்சாலை வாஷி கழிமுக பாலத்தில் சென்று கொண்டு இருந்தது. அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த கியாஸ் டேங்கர் லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது. இதில், கார் அப்பளம் போல நொறுங்கியது. மேலும் கார், லாரி டிரைவர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயங்களுடன் துடித்துக்கொண்டிருந்த டிரைவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல நேற்று காலை 9 மணியளவில் வாஷி கழிமுக பாலத்தில் சென்று கொண்டு இருந்த கார் ஒன்று திடீரென பிரேக் போட்டு நிறுத்தப்பட்டது. இதனால் அதன் பின்னால் வந்த வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதில் 5 வாகனங்கள் சேதமடைந்தன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
இந்த சம்பவத்தால் நேற்று காலைt மும்பை- பன்வெல் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த 2 விபத்துகள் குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.