புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி நாகையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்,
நாகை தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கோவி.நாராயணன் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் ரங்கநாதன், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். மாநில தணிக்கைக்குழு உறுப்பினர் சோமலிங்கம் கலந்து கொண்டு, கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
21 மாத ஊதிய நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். ஓய்வூதியர்களை சி, டி, என பிரிக்காமல் அனைவருக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும். மத்திய அரசு போல் மருத்துவபடியை ரூ. ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும்.
நகராட்சி ஓய்வூதியர்களுக்கு ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் எந்த மருத்துவமனையில் எந்தவித சிகிச்சை பெற்றாலும் அதற்குரிய மருத்துவ செலவு முழுவதையும் காப்பீட்டு திட்டமே ஏற்றுகொள்ள வழிவகை செய்ய வேண்டும். 1.1.2006-க்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கு அடிப்படை ஊதியத்துடன் தர ஊதியத்தை இணைத்து அதில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக நிர்ணயம் செய்ய வேண்டும். வருமானவரி பிடித்தம் செய்வதில் இருந்து ஓய்வூதியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் முருகேசன் நன்றி கூறினார்.