திருவண்ணாமலையில் குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்க எதிர்ப்பு
திருவண்ணாமலை ராமலிங்கனார் தெருவில் குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி ஆணையரை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 19-வது வார்டு ராமலிங்கனார் தெருவில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் குழந்தைகள் நல மையம், மருத்துவமனைகள், நியாயவிலை கடை போன்றவை உள்ளது. இந்த நிலையில் ராமலிங்கனார் தெருவில் உள்ள நியாயவிலை கடையின் அருகில் நகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு அஸ்திவாரம் போட பள்ளங்கள் தோண்டப்பட்டன.
இந்த நிலையில் நேற்று எங்கள் தெருவில் குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கக் கூடாது என்று அந்த பகுதியை சேர்ந்த மக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் அஸ்திவாரம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மண் வெட்டியால் மூட முயன்றனர்.
முற்றுகை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் பாரிஜாதம் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அவர்கள், நகராட்சி ஆணையரை முற்றுகையிட்டு, எங்கள் பகுதியில் குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கக்கூடாது என்று கோரிக்கை வைத்தனர். அப்போது நகராட்சி ஆணையர், இந்த மையம் அமைக்கப்படுவதால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் வராது என்று கூறினார். தொடர்ந்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் நகராட்சி ஆணையர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.