மக்கள் தொடர்பு முகாமில் 143 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சம் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்
வள்ளிமதுரையில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் 143 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மலர்விழி வழங்கினார்.
அரூர்,
அரூர் தாலுகா வள்ளிமதுரை கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் பத்மாவதி வரவேற்றார். வேளாண் இணை இயக்குனர் சுசீலா, தனித்துணை கலெக்டர் முத்தையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்திய கலெக்டர் மலர்விழி பல்வேறு துறைகளின் சார்பில் 143 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சத்து 45 ஆயிரத்து 453 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இந்த முகாமில் 192 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இவற்றில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு 53 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மீதமுள்ள மனுக்களை பரிசீலனை செய்து தகுதியுடைய பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் முழுமையாக கிடைத்திட விரைவான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு திருமண நிதிஉதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. இளவயது திருமணங்களை செய்வதால் பெண்களின் உடல் நலனும் பிறக்கும் குழந்தைகளின் உடல்நலனும் பாதிக்கப்படுகிறது.
எனவே 18 வயது பூர்த்தி அடைந்த பின்னரே பெண்களுக்கு பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க வேண்டும். இளம் வயது திருமணத்தை நடத்துபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்காக சேமிக்கும் தண்ணீரை மூடிவைத்து பயன்படுத்த வேண்டும். இதனால் டெங்கு கொசுபுழுக்கள், நோய்க்கிருமிகள் உருவாகுவதை முற்றிலும் தவிர்க்கலாம். அரசின் இந்த திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் மலர்விழி பேசினார்.
முகாமில் மாவட்ட வழங்கல் அலுவலர் மகாலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அமீர்பாஷா, தாட்கோ பொது மேலாளர் வைத்தியநாதன், தொழிலாளர் உதவி ஆணையர் இந்தியா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன், கலால் உதவி இயக்குனர் மல்லிகா, தாசில்தார் பரமேஸ்வரி, வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் ஜெயகுமார் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.