திருவள்ளூரில் நாளை வேலை வாய்ப்பு முகாம்

திருவள்ளூரில் நாளை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

Update: 2018-03-21 22:35 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் முன்னணி தனியார் நிறுவனங்களால் 100-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் திருவள்ளூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் மற்றும் 10-ம் வகுப்பு படித்தவர்கள் கலந்து பயன்பெறலாம். இதன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகப்பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்