மகனை மீட்டுத்தரக்கோரி பெண் தொடர்ந்த வழக்கில் திருப்பம்: திருநங்கையாக ஐகோர்ட்டில் ஆஜர் ஆனார்
காணாமல் போன மகனை மீட்டுத்தரக்கோரி பெண் ஒருவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். விசாரணையின் போது அந்த நபர் திருநங்கையாக ஐகோர்ட்டில் ஆஜரானார். ‘மேஜர்’ என்பதால் அவரது விருப்பப்படி செல்ல நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சென்னை,
சென்னை கொரட்டூரைச் சேர்ந்த கலைவாணி, ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், ‘கடந்த ஜனவரி மாதம் எனது மகன் ராகுல்(வயது 19) காணாமல் போய்விட்டான். இதுகுறித்து கொரட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன் ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, காணாமல் போன எனது மகனை மீட்டு ஐகோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, மனுதாரரின் மகன் ராகுலை கண்டுபிடித்து ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தவேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டது.
இந்தநிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதிகள் சி.டி.செல்வம், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுலை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர் புடவை அணிந்து இருந்தார். அப்போதுதான் தனது மகன், திருநங்கையாக மாறி இருப்பது தாயார் கலைவாணிக்கு தெரிந்தது.
தனது மகனை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். தனது மகன் விருப்பப்பட்டு திருநங்கையாக மாற வாய்ப்பு இல்லை என்றும், சிவகங்கையில் உள்ள சிலர் தனது மகனை ஊசி மற்றும் மருந்து மூலமாக திருநங்கையாக மாற்றிவிட்டதாக கலைவாணி கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இணையதளங்களை பார்த்து தனது சொந்த ஆசையால் திருநங்கையாக மாறியதாகவும், தற்போது தனது பெயரை சுமித்ரா என்று மாற்றிக்கொண்டதாகவும் தாயுடன் செல்ல விரும்பவில்லை என்றும் ராகுல் நீதிபதிகளிடம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அவருக்கு, நீதிபதிகள் அறிவுரை கூறினர். இதன்பின்பு அவர், ‘மேஜர்’ என்பதால் அவரது விருப்பப்படி செல்ல நீதிபதிகள் உத்தரவிட்டனர்.