ஆதி திராவிடர் குடியிருப்பு வீடுகளை அமைச்சர் கந்தசாமி ஆய்வு
மூர்த்திக்குப்பம் கிராமத்தில் ஆதி திராவிடர் குடியிருப்பு வீடுகளை அமைச்சர் கந்தசாமி ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் குறைகள் கேட்டார்.
பாகூர்,
பாகூர் தொகுதிக்குட்பட்ட மூர்த்திக்குப்பம் கிராமத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் குடியிருப்புகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்டது. தற்போது, இந்த குடியிருப்புகள் சேதமாகி இடிந்துவிழும் நிலையில் உள்ளது.
இதனால், பாதிக்கப்பட்ட மக்கள், தனவேலு எம்.எல்.ஏ.வை சந்தித்து புதிய குடியிருப்புகள் கட்டித்தரவேண்டும், பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள இலவச மனைப்பட்டா வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக தனவேலு எம்.எல்.ஏ., ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கந்தசாமியிடம் கூறினார். அதன்பேரில் அமைச்சர் கந்தசாமி, தனவேலு எம்.எல்.ஏ., ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் ரகுநாதன் ஆகியோர் நேற்று மூர்த்திக்குப்பம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இந்த ஆய்வின்போது தாசில்தார் மாசிலாமணி, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்திரராஜன், வருவாய் ஆய்வாளர் முருகையன், முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.