வழிபாட்டுதலம் அருகே கூட்டத்துக்கு அனுமதி அளித்த காவல்துறை அதிகாரிகள் மீது வழக்கு போட வேண்டும்
வழிபாட்டுதலம் அருகே கூட்டத்துக்கு அனுமதி அளித்த காவல் துறை அதிகாரிகள் மீது வழக்கு போட வேண்டும் என்று மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
புதுச்சேரி,
புதுவை மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் ஆளும் காங்கிரஸ் அரசு மத ரீதியிலான மோதல்களை உருவாக்கும் வகையில் தி.க. பொதுக்கூட்டத்தை கோவில் அருகே நடத்த திட்டமிட்டு அனுமதி அளித்துள்ளது. கூட்டத்தின் நோக்கப்படி மதவழிபாடுகளையும், இந்து கடவுளையும் இழிவுபடுத்தி பேசியுள்ளனர். இதை தட்டிக்கேட்ட பொதுமக்கள் மீது தி.மு.க., தி.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சேர்ந்து தாக்கியதில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து காவல்துறை துணையுடன் ஆளும் காங்கிரஸ் அரசு இந்து மக்களுக்கு எதிராக செயல்பட்டு மத மோதல்களை உருவாக்கி வருகிறது. தற்போது புதுச்சேரியில் பல தேச விரோத சக்திகள் இணைந்துள்ளன. திராவிடர் கழகம் தொடர்ந்து சட்டவிரோத கருத்துகளை பரப்பி வருகிறது. இதன்மூலம் பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவிக்கும்பட்சத்தில் காவல்துறைக்கு அந்த கூட்டத்தை நிறுத்த உரிமை உண்டு.
ஆனால் காங்கிரஸ் அரசு அனுமதி வழங்கிய சட்டவிரோத தி.க. கூட்டத்தில் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்டு அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து பொதுமக்களை தாக்கி உள்ளனர். இந்த செயலை பாரதீய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது. நீதிமன்ற ஆணைப்படி வழிபாட்டு தலங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அருகே கூட்டம் நடத்த அனுமதியில்லை. எனவே அங்கு கூட்டம் நடத்த அனுமதி அளித்த காவல்துறை அதிகாரிகள் மீது உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஆளும் காங்கிரஸ் அரசு பாரதீய ஜனதா கட்சியினர் மீது பொய்வழக்குப்போட பல்வேறு வகையில் முயற்சி செய்து வருகிறது. முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு தொடர்ந்து வளர்ச்சி திட்டங்களுக்கு எந்தவித முக்கியத்துவமும் கொடுக்காமல் பொதுமக்கள் பிரச்சினைகளை திசை திருப்ப இதுபோன்ற செயல்களை செய்து வருகிறது.
பொதுமக்கள் சீனியர் போலீஸ் சூப்பிரண்டை தொடர்புகொண்டு, கூட்டம் நடைபெறும் இடத்தை மாற்றக்கோரி கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அவர் உத்தரவிட்டும் ஆளும் கட்சியினர் பேச்சைக்கேட்டு அந்த காவல்நிலைய ஆய்வாளர், துணை ஆய்வாளர் இருவரும் அதே இடத்தில் கூட்டத்தை நடத்த அனுமதி அளித்ததன் காரணமாக அங்கு தகாத வன்முறை நடந்துள்ளது. எனவே இந்த வன்முறை சம்பவத்துக்கு அந்த காவல்நிலையத்தின் ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளர் பொறுப்பு ஏற்கவேண்டும். 200-க்கும் மேற்பட்ட அடியாட்கள் பொதுமக்களை தாக்கி உள்ளனர். இதற்கு காரணமானவர்கள் மீது காவல்துறை உடனடியாக வழக்கு தொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.