கோரிப்பாளையம் பறக்கும் பாலம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் நோட்டீசை ரத்து செய்ய வேண்டும், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு
கோரிப்பாளையம் பறக்கும் பாலம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மதுரை,
மதுரை அமெரிக்கன் கல்லூரி செயலாளரும், முதல்வருமான தவமணி கிறிஸ்டோபர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரை அமெரிக்கன் கல்லூரி 1881-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 45 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கல்லூரியில் பல்வேறு பட்டப் படிப்புகளில் தற்போது 5 ஆயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள். அமெரிக்கன் கல்லூரி கட்டிடம் தமிழகத்தின் பழமையான புராதன கட்டிடமாக திகழ்கிறது.
இந்தநிலையில் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் பறக்கும் மேம்பாலம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக வருவாய் அதிகாரி நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் கருத்து கேட்கப்படவில்லை. எந்த ஒரு பொது அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
ஆனால் நிலம் கையகப்படுத்தும்போது சம்பந்தப்பட்டவர்களிடம் கருத்து கேட்பது, உரிய இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் முறையாக மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு 2014-ம் ஆண்டு கொண்டு வந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் நிலம் கையகப்படுத்தும் பணியில் சார்பு நீதிபதியை ஈடுபடுத்த வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதல்களும் கடைபிடிக்கப்படவில்லை. இந்த நடவடிக்கையில் ஈடுபட வருவாய் அதிகாரிக்கு அதிகாரம் இல்லை. மேலும் பறக்கும் சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டால் கல்லூரி வளாகத்தில் உள்ள பழமையான கட்டிடம் பாதிக்கப்படும். எனவே கோரிப்பாளையம் பறக்கும் பாலத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பணி தொடர்பான நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
முடிவில், இதுதொடர்பாக உரிய தகவல் கேட்டு தெரிவிக்க வேண்டும் என்று அரசு வக்கீலுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
பின்னர் இந்த வழக்கை 23-ந்தேதிக்கு (அதாவது நாளை) ஒத்திவைத்தார்.