ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்
ராமராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
மானாமதுரை,
ராமராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் தி.மு.க., காங்கிரஸ், த.மு.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையில் ராமராஜ்ய ரதம் நேற்று மதுரை, திருப்புவனம் வழியாக மானாமதுரைக்கு வருகை தந்தது. அப்போது ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து மானாமதுரை-சிவகங்கை ரோட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட செயலாளர் திருமொழி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் சுடர்மணி, பாஸ்கரன், நகர செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 16 பேரை மானாமதுரை போலீசார் கைது செய்தனர்.