மங்களமேடு அருகே பரிதாபம் லாரி மீது கார் மோதல்; 2 பேர் பலி
மங்களமேடு அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக பலியாகினர்.
மங்களமேடு,
சென்னை திரிசூலம் பகுதியை சேர்ந்தவர் செல்வ குமார் என்கிற செல்வா பாண்டியர் (வயது 39). இவரது மனைவி நிவேதிதா (25). இவர்கள் இருவரும் காரில் சென்னை நோக்கி நேற்று சென்று கொண்டு இருந்தனர். காரை தென்காசி, வேலாயுதபுரத்தை சேர்ந்த சுரேஷ் (31) என்பவர் ஓட்டினார். தமிழர் நடுவம் என்ற அமைப்பை செல்வகுமார் நடத்தி வந்தார்.
கார் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு மின்வாரிய அலுவலகம் அருகே வந்து கொண்டு இருந்தபோது முன்னாள் சென்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக கார் மோதியது. இந்த விபத்தில் செல்வ குமார், டிரைவர் சுரேஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். நிவேதிதா படுகாயம் அடைந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து உடனடியாக மங்களமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்தில் காயமடைந்த நிவேதிதாவை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற் கிடையே போலீசார் இறந்த செல்வகுமார், சுரேஷ் ஆகிய 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் ஆந்திர மாநிலம் அனந்தப்பூரை சேர்ந்த சிவாவை (39) பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.