காரில் கடத்தப்பட்ட 816 மதுபாட்டில்கள் பறிமுதல் டிரைவர் உள்பட 2 பேர் கைது

மயிலாடுதுறை அருகே காரில் கடத்தப்பட்ட 816 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2018-03-21 22:45 GMT
மயிலாடுதுறை,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை உட்கோட்ட மதுவிலக்கு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் உத்தரவின்பேரில் மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் நல்லாடை மெயின்ரோடு முக்கூட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காரில் 17 அட்டை பெட்டிகளில் 816 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. மேலும் போலீசார் காரில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், மதுபாட்டில்களை காரைக்காலில் இருந்து கடத்தி வந்ததும் தெரியவந்தது.

கைது

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் காரைக்கால் மாவட்டம் நிரவி சங்கரன்தோப்பு பகுதியை சேர்ந்த பாலு மகன் பவித்ரன் (வயது 22), அவரது உதவியாளரான அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் பாலகுமார் (22) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து மதுபாட்டில்களையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்