ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வீட்டில் 12 பவுன் நகை திருட்டு மகளின் தோழி கைது
அய்யம்பேட்டை அருகே ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வீட்டில் 12 பவுன் நகை திருட்டு போனது. இது தொடர்பாக அவரது மகளின் தோழி கைது செய்யப்பட்டுள்ளார்.
அய்யம்பேட்டை,
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை ராயல்டவுன் பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ்(வயது62). ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இ்ன்ஸ்பெக்டர். இவருடைய மகள் பாலதிவ்யா (வயது28). சித்த மருத்துவரான இவர் கும்பகோணத்தில் உள்ள சித்த மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். பாலதிவ்யா தினமும் அய்யம்பேட்டையில் இருந்து கும்பகோணத்துக்கு பஸ்சில் சென்று வருவது வழக்கம்.
கும்பகோணம் எலுமிச்சங்காபாளையம் பாரதி தெருவை சேர்ந்தவர் கிருபா என்ற பத்மா(35). இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். பாலதிவ்யா செல்லும் பஸ்சில் பத்மா தினமும் கும்பகோணத்துக்கு சென்று வந்தார். இதனால் பாலதிவ்யாவுக்கும், பத்மாவுக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டது. பத்மா தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் இதனால் தனது கணவன் தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டார் என பாலதிவ்யாவிடம் கூறினார். இதனால் பத்மா மீது அனுதாபம் கொண்ட பாலதிவ்யா அவருக்கு ஆறுதல் கூறினார்.
திருட்டு
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பத்மா, பாலதிவ்யா வீட்டுக்கு அடிக்கடி சென்று வர தொடங்கினார். இந்தநிலையில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தனது மனை-வி, மகள் அணியும் வளையல், சங்கிலி, கைச்செயின், தோடு உள்ளிட்ட 12 பவுன் நகைகளை ஒரு சில்வர் டப்பாவில் போட்டு சமையல் அறை அலமாரியில் வைத்திருந்தார். இந்த நகைகள் திடீரென திருட்டு போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராமதாஸ் குடும்பத்தினர் நகையை தேடினர். அப்போது அவர்களுக்கு பத்மா மீது சந்தேகம் ஏற்பட்டது.
கைது
இதனால் ராமதாஸ் குடும்பத்தினர் பத்மாவிடம் விசாரித்தனர். அப்போது அவர் நகைகளை எடுக்கவில்லை என கூறினார். இது குறித்து ராமதாஸ் அய்யம்பேட்டை போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் பத்மாவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நகைகளை திருடி விற்று ஆடம்பரமாக வாழ்ந்ததை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து போலீசார் பத்மாவை கைது செய்தனர். ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வீட்டில் அவரது மகளின் தோழி போல நடித்த பெண் நகையை திருடி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அய்யம்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.