ரெயில்வே அதிகாரிகள் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்

மும்பையில் நேற்று ரெயில்வேயில் பயிற்சி பெறும் மாணவர்கள் திடீர் மறியல் போராட்டம் செய்ததால் ரெயில் சேவை முடங்கியது.

Update: 2018-03-20 23:23 GMT
மும்பையில் நேற்று ரெயில்வேயில் பயிற்சி பெறும் மாணவர்கள் திடீர் மறியல் போராட்டம் செய்ததால் ரெயில் சேவை முடங்கியது. இந்த விவகாரம் சட்டபையில் எதிரொலித்தது. எதிரக்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண வி.கே. பாட்டீல் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து முதல்-மந்திரி தேவேந்திரபட்னாவிஸ் கூறியதாவது:-

ரெயில்வே பயிற்சி மாணவர்களில் 20 சதவீத பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆனால் பயிற்சி மாணவர்கள் தங்களுக்கு 100 சதவீதம் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்களுடன் ரெயில்வே அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்