கர்நாடகத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்க மக்கள் ஆசி வழங்க வேண்டும் முதல்-மந்திரி சித்தராமையா உருக்கம்
கர்நாடகத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்க மக்கள் ஆசி வழங்க வேண்டும் என்று முதல்-மந்திரி சித்தராமையா உருக்கமாக பேசினார்.
மங்களூரு,

ஆசி வழங்க வேண்டும்
உடுப்பி அருகே உள்ள படுபித்ரியில் நேற்று மாலை ராகுல் காந்தி கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி சித்தராமையா பேசிய தாவது:-
காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது என்பதை இந்த கூட்டமே எடுத்து காட்டுகிறது. ராகுல் காந்தி மீனவர்கள் கஷ்டத்தை நன்கு புரிந்து கொண்டவர். கடந்த தேர்தலின் போது மாநில மக்களின் ஆசியால் தான் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. அதேப்போல் இந்த முறையும் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க மக்கள் ஆசி வழங்க வேண்டும்.
கையை பலப்படுத்துவோம்
பிரதமர் மோடி தேர்தல் நேரத்தில் கொடுத்த ஒரு வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. ஏழை மக்களின் நலனுக்காக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் தற்போது பாடாத பாடுபடுகிறது.
உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் தடையால் எந்த பயனும் இல்லை. மக்களுக்கு கஷ்டம் தான் உண்டானது. கர்நாடகத்தில் மதவாத பிரிவினையை ஏற்படுத்தி பா.ஜனதா ஆட்சி அமைக்க பார்க்கிறது. அது ஒரு போதும் நடக்காது. கர்நாடக மக்கள் அனைவரும் சேர்ந்து ராகுல்காந்தியின் கையை பலப்படுத்துவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.