மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் போது மீனவர்களுக்கு தனி ஆணையம் உருவாக்கப்படும் ராகுல் காந்தி பேச்சு
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் போது மீனவர்களுக்கு தனி ஆணையம் உருவாக்கப்படும் என்று ராகுல்காந்தி பேசினார்.
மங்களூரு,

ராகுல் காந்தி வருகை
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி 3-வது கட்டமாக கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அவர் நேற்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் மங்களூருவுக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் உடுப்பி மாவட்டம் தெங்கஎருமால் பகுதிக்கு சென்று அங்கு புதிதாக கட்டப்பட்டு உள்ள அரசியல் பயிற்சி பள்ளியான ராஜீவ்காந்தி தேசிய அகாடமியை திறந்து வைத்தார். பின்னர் அங்கிருந்து படுபித்ரிக்கு பிரசார வாகனத்தில் அவர் சென்றார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார்.
இதனை தொடர்ந்து காபு, முல்கி, சூரத்கல் ஆகிய பகுதிகளில் நடந்த பொதுக்கூட்டங்களிலும் அவர் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அங்கிருந்து பிரசார வாகனத்திலேயே அவர் மங்களூரு டவுனில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அவருக்கு வழிநெடுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஆசி வேண்டும்
அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்த அவர் பின்னர் ஜோதி சர்க்கிள் பகுதியில் உள்ள நேரு விளையாட்டு மைதானத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அங்கு கூடியிருந்த கூட்டத்தை பார்த்து அவர் உற்சாகமாக கையசைத்தார். இதனை தொடர்ந்து அவருக்கு கர்நாடக உணவுத்துறை மந்திரி பாக்கு மட்டையால் ஆன தொப்பியை நினைவு பரிசாக வழங்கினார். அதை அவர் வாங்கி தலையில் வைத்து கொண்டார். பின்னர் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கன்னட மொழியில்பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
நிம்ம எல்லாருக்கு நமஸ்காரா(உங்கள் எல்லாருக்கும் வணக்கம்) என்று ஆரம்பித்தார். இதனை தொடர்ந்து அவர் பேசும்போது, நாராயண குரு, பசவண்ணர் வாழ்ந்த பூமியில் நாம் எல்லாரும் வாழ்ந்து வருகிறோம். கடலோர கர்நாடக மாவட்ட மக்கள் காங்கிரஸ் அரசின் மீது அபார நம்பிக்கை வைத்து உள்ளனர். இந்த நம்பிக்கை கடந்த தேர்தலின் போது எதிரொலித்தது. உங்களின் ஆசி எப்போதும் எங்களுக்கு வேண்டும்.
தனி ஆணையம் உருவாக்கப்படும்
முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு வளர்ச்சி பணிகளில் அதிகம் கவனம் செலுத்தியுள்ளது. பிரதமர் மோடி கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. அவர் மோசடி செய்து உள்ளவர்களுக்கு தான் துணை போய் உள்ளார்.
மேலும் அமெரிக்காவில் பாரத மக்களை அவமானப்படுத்தி உள்ளார். அரசியலில் அவரை வளர்த்து விட்ட அத்வானி, அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜை ஓரம் கட்டிவிட்டு எல்லா சாதனைகளையும் தானே செய்ததாக பேசி வருகிறார். அமித்ஷா மகன் ஜெய்ஷாவின் சொத்து மடங்கு உயர்ந்தது, குஜராத் பெட்ரோலிய இழப்பீடு, நிரவ் மோடி செய்த வங்கி மோசடி பற்றி பேசாமல் மோடி மவுனம் காப்பது ஏன்? என்பது தெரியவில்லை.
மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை அமைக்கும். அப்போது மீனவர்களுக்கு தனி ஆணையம் உருவாக்கப் படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி சித்தராமையா, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால், மந்திரி யு.டி.காதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.