புதுச்சேரி மாநிலத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடலில் மூழ்கி பலியாவதை தடுக்க வேண்டும் - கவர்னர் கிரண்பெடி
புதுச்சேரி மாநிலத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடலில் மூழ்கி பலியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி மாநிலத்துக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள், கல்லூரி மாணவர்கள் கடலில் குளிக்கும்போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து விடுகின்றனர். இதனை தடுப்பது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று கவர்னர் மாளிகையில் நடந்தது.
கூட்டத்திற்கு கவர்னர் கிரண்பெடி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுவையில் கடலில் மூழ்கி உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுப்பதற்கு, சுற்றுலாத்துறை, காவல் துறை, கடலோர காவல் படை, மீன் வளத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து, கடற்கரைப் பகுதிகளில் கள ஆய்வினை மேற்கொள்ள வேண்டும். கடற்கரை பகுதிகளில் உயிரிழப்பை ஏற்படுத்தும் ஆழமான பகுதிகள், விபத்துகள் ஏற்படும் நேரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும் இது தொடர்பாக கடற்கரை பகுதியில் வசித்து வரும் மீனவ மக்களிடமும் கருத்துகளை கேட்க வேண்டும்.
கடலில் மூழ்கி உயிரிழப்பு ஏற்படும் இடங்களில் சுற்றுலாத்துறையினர் எச்சரிக்கை பலகைகள் அமைக்க வேண்டும். ஆபத்தான இந்த இடங்களில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கக்கூடாது என அறிவுறுத்த வேண்டும். இந்த இடங்களில், ரோந்துக்குழுவினர், மீட்புக்குழுவினர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கடற்கரை பகுதியில் உள்ள ஆபத்தான இடங்கள் குறித்த தகவல்களை சுற்றுலாத்துறை தனது இணைய தளத்தில் வெளியிட வேண்டும்.
கடற்கரை பகுதியில் அமைந்துள்ள சொகுசு விடுதிகளில் தங்கும் சுற்றுலாப்பயணிகள், இதுபோன்ற ஆபத்தான இடங்களில் குளிப்பதற்கு அனுமதிக்கக்கூடாது. சொகுசு படகுகளை இயக்குவோர் உரிய உரிமத்துடனும், பயிற்சி பெற்றவர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த படகுகளில் மிதவை, பாதுகாப்பு உடைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும் என்பதை ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும். கடலோர பகுதியில் மூழ்கி உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் போலீஸ் டி.ஜி.பி. சுனில் குமார் கவுதம், மீன்வளத்துறை இயக்குனர் வின்சென்ட் ராயர், புதுவை மண்டல இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.