பா.ஜனதாவினர் சாதி, மத கலவரங்களை தூண்டி விடுகிறார்கள் ராகுல் காந்தி குற்றச்சாட்டு
நாட்டில் சாதி, மத கலவரங்களை பா.ஜனதாவினர் தூண்டி விடுகிறார்கள் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
மங்களூரு,

ராகுல் காந்தி
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி 3-வது கட்டமாக கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று காலை 11.40 மணிக்கு புதுடெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மங்களூரு பஜ்பே சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். அவரை முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர், மந்திரி ரமாநாத் ராய், மங்களூரு மாநகராட்சி மேயர் பாஸ்கர் மொய்லி, லோபோ எம்.எல்.ஏ. ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் உடுப்பி மாவட்டம் தெங்கஎருமால் பகுதிக்கு சென்ற ராகுல் காந்தி, அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள அரசியல் பயிற்சி பள்ளியான ராஜீவ்காந்தி தேசிய அகாடமியை திறந்து வைத்தார். பின்னர் அங்கிருந்து படுபித்ரிக்கு பிரசார வாகனத்தில் சென்ற ராகுல்காந்தி அங்கு மக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
புண்ணிய பூமி
எனக்காக(ராகுல் காந்தி) வெயிலில் நீண்டநேரம் நிற்பவர்களுக்கு இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இது நாராயண குருவின் புண்ணிய பூமி. ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்ற அவருடைய மந்திரத்தின்படி வாழ்கிறோம். அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற பசவண்ணரின் தத்துவம் போல சொன்னதை செய்கிறோம். ஆனால் தர்மத்திற்கு எதிராக பா.ஜனதாவினர் செயல்படுகின்றனர். நாட்டில் பா.ஜனதாவினர் சாதி, மத கலவரங்களை தூண்டி விடுகிறார்கள்.
நாட்டில் மிகப்பெரிய 4 வங்கிகளை மத்திய அரசு தற்போது பாழாக்கி உள்ளது. மத்திய அரசு முதலீட்டாளர்களின் கடன் ரூ.2½ லட்சம் கோடியை தள்ளுபடி செய்துள்ளது. ஆனால் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யவில்லை. நாட்டில் உள்ள ஏழைகள் மீது மோடிக்கு அக்கறை இல்லை.
சொன்ன மாதிரி நடக்கவில்லை
கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால் 10 ரூபாயை கூட அவர் போடவில்லை. வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக கூறிய அவர் எத்தனை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கினார். சொன்ன மாதிரி மோடி நடந்து கொள்ளவில்லை. காங்கிரசின் ஒரே தத்துவம் சொன்னதை செய்வோம் என்பது ஆகும். கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்.
அன்னபாக்யா திட்டம், குடிநீர் திட்டம், கல்வி உள்பட அனைத்திலும் கர்நாடகம் நாட்டிலேயே முன்மாதிரி மாநிலமாக உருவாகி வருகிறது. 70 வருடங்களாக நாட்டில் காங்கிரஸ் ஒன்றுமே செய்யவில்லை என மோடி கூறுகிறார். 70 ஆண்டுகளாக மக்கள் நாட்டில் வாழவில்லையா? வியாபாரம் நடக்கவில்லையா?. தற்போது உள்ள பிரிவினைவாதிகளை புறந்தள்ளி அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.