பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்தக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்தக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2018-03-20 22:00 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் நேற்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் உழைக்கும் பெண்கள் ஒருங் கிணைப்புக்குழு ஆகியவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் சித்ரா தலைமை தாங்கினார். உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி மெஹராஜ்பேகம் முன்னிலை வகித்தார். ஜனநாயக மாதர் சங்க மாநில துணைத்தலைவர் சங்கரி, துணை செயலாளர் கீதா, சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் குமார், மாவட்ட செயலாளர் முத்துக்குமரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி கூலியை உயர்த்தி வழங்க வேண்டும், நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் நிஷா, அமுதா, பிரேமகுமாரி, ஜெசிந்தாமேரி, வண்ணமதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்