கல்லிடைக்குறிச்சியில் போலீஸ்காரரின் மனைவி, 6 மாத குழந்தையுடன் தீயில் கருகி சாவு காரணம் என்ன? உதவி கலெக்டர் விசாரணை
கல்லிடைக்குறிச்சியில் போலீஸ்காரரின் மனைவி 6 மாத குழந்தையுடன் தீயில் கருகி பரிதாபமாக இறந்தார்.
அம்பை,
கல்லிடைக்குறிச்சியில் போலீஸ்காரரின் மனைவி 6 மாத குழந்தையுடன் தீயில் கருகி பரிதாபமாக இறந்தார். அவர்களது சாவுக்கு காரணம் என்ன? என்பது குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
போலீஸ்காரரின் மனைவி
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி மடவிளாகம் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன். ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். இவருடைய மகள் மஞ்சுளா (வயது 33). இவருக்கும், பணகுடியை சேர்ந்த சுப்பிரமணியனுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சுப்பிரமணியன் வள்ளியூரில் போக்குவரத்து போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு சுதீப் (4) என்ற மகனும், 6 மாத பெண் குழந்தையும் இருந்தனர்.
மஞ்சுளா தனது 6 மாத கைக்குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். சிறுவன் சுதீப் தந்தை சுப்பிரமணியனுடன் வசித்து வருகிறான்.
தாய்-குழந்தை தீயில் கருகி சாவு
இந்த நிலையில், நேற்று மாலையில் மஞ்சுளா தனது 6 மாத குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்து உள்ளார். அப்போது வீட்டில் இருந்து புகை வெளியேறி உள்ளது. இதுகுறித்து உடனடியாக அக்கம்பக்கத்தினர் அம்பை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, வீட்டில் பிடித்த தீயை அணைத்தனர்.
அப்போது மஞ்சுளா தனது 6 மாத குழந்தையுடன் தீயில் கருகி இறந்து கிடந்தது தெரியவந்தது. வீட்டில் உள்ள கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு இருந்தது. உடனே அந்த சிலிண்டரை தண்ணீர் தொட்டிக்குள் தீயணைப்பு படையினர் தூக்கிப் போட்டனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த கல்லிடைக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிரதாபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மஞ்சுளாவுக்கும், அவரது கணவர் சுப்பிரமணியனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மஞ்சுளா தனது குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கியாஸ் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டு அவர்கள் இறந்தனரா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மஞ்சுளாவுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகளே ஆவதால், அவரது சாவுக்கான காரணம் குறித்து சேரன்மாதேவி உதவி கலெக்டர் ஆகாஷ் மேல் விசாரணை நடத்தி வருகிறார். 6 மாத குழந்தையுடன் போலீஸ் காரரின் மனைவி தீயில் கருகி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.