ஏழை-எளிய மக்களுக்கு டாக்டர்கள் சேவை செய்ய வேண்டும், கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு
கே.எம்.சி.எச். மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு, ஏழை-எளிய மக்களுக்கு டாக்டர்கள் சேவை செய்ய வேண்டும் என்று பேசினார்.
கோவை,
கோவையில் உள்ள கே.எம்.சி.எச். மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மருத்துவ கல்லூரி தொடங்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. கே.எம்.சி.எச். தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி புதிய மருத்துவ கல்லூரி குறித்து பேசினார். துணைத்தலைவர் டாக்டர் தவமணி பழனிசாமி குத்துவிளக்கு ஏற்றினார்.
விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு, கே.எம்.சி.எச். மருத்துவ கல்லூரிக்கான அடிக்கல் பெயர் பலகையை பொத்தானை அழுத்தி திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்து உள்ள ஆயிரம் பேருக்கு ஒரு டாக்டர் என்ற அளவீடு நமது நாட்டில் குறைவாக இருக்கிறது. வரக்கூடிய ஆண்டுகளில் பெருகும் மக்கள் தொகை அடிப்படையில் கணக்கிடும்போது, மக்கள் தொகை அதிகளவில் இருக்கும், ஆனால் மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். எனவே நமது நாட்டில் ஏராளமான மருத்துவர்களை உருவாக்கக்கூடிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டு உள்ளோம்.
ஒவ்வொரு ஆண்டும் 61 ஆயிரத்துக்கும் அதிகமான மருத்துவர்களை உருவாக்கி கொண்டு இருக்கும் நிலையில் கூட வருகிற 2030-ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நாம் அடைய முடியாது.
புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்குவதாலும், எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இடங்களை அதிகப் படுத்துவதால் மட்டுமே தேவையான டாக்டர்களை உருவாக்க முடியும். அடுத்த 12 ஆண்டுகளில் நமது நாட்டில் குறைந்த பட்சம் 600 மருத்துவ கல்லூரிகள் உருவானால் மட்டுமே கூடுதல் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.
இதய அறுவை சிகிச்சைக்கு என்னென்ன கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று அரசு நிர்ணயம் செய்து உள்ளது. அதை சில மருத்துவமனைகள் சரியாக வசூலிக்கின்றன. ஆனால் ஒருசில மருத்துவ மனைகள் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்துடன் கூடுதலாக மறைமுக கட்டணத்தை வசூலித்து விடுகிறது. அதை டாக்டர்கள் அனைவரும் மாற்றிக்கொள்ள வேண்டும்.
டாக்டர்கள் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பணியாற்ற வேண்டும். அதிக பணம் செலவழித்தால்தான் மருத்துவ சேவை கிடைக்கும் என்ற நிலையை மாற்றி ஏழை எளிய மக்களுக்கு டாக்டர்கள் சேவை செய்ய வேண்டும்.
சில டாக்டர்கள் அரசு மீது குறை சொல்லுவதுடன், அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகள் லஞ்சம் வாங்குவதுடன் ஊழல் செய்கிறார்கள் என்று கூறி வருகிறார்கள். அது மிகவும் தவறானது.
இவ்வாறு அவர் கூறினார்.