திருப்பூரில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து த.மா.கா. இளைஞர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து த.மா.கா. இளைஞர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

Update: 2018-03-20 22:00 GMT
திருப்பூர்,

த.மா.கா. இளைஞர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே நேற்று காலை நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு இளைஞர் அணி மாவட்ட தலைவர் நடராஜ் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் காலம் கடத்தி வரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும், பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்குள் கொண்டு வர வலியுறுத்தியும், பஸ் கட்டண உயர்வை குறைக்க கோரியும், திருப்பூர் மாநகரில் அடிப்படை வசதிகளை செய்யாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தை இளைஞர் அணி மாநில செயலாளர் கந்தசாமி தொடங்கி வைத்தார். த.மா.கா. மாநகர் மாவட்ட தலைவர் ரவிக்குமார், மாநில பொதுச்செயலாளர் மோகன் கார்த்திக், மாநில செயலாளர் சேதுபதி, வடக்கு மாவட்ட தலைவர் சண்முகம், தெற்கு மாவட்ட தலைவர் ரத்தினவேல், மாநில இளைஞர் அணி பொதுச்செயலாளர் கோவிந்தராஜ் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்