25 இடங்களில் அரிவாள் வெட்டு: ‘ஒன்றும் அறியாத சிறுவனை கொன்றது மனிதாபிமானமற்ற செயல்’ தீர்ப்பில் நீதிபதி கருத்து

ஒன்றும் அறியாத சிறுவனை 25 இடங்களில் அரிவாளால் வெட்டிக்கொன்றது மனிதாபிமானமற்ற செயல் என்று தனது தீர்ப்பில் நீதிபதி அப்துல்காதர் கூறியுள்ளார்.

Update: 2018-03-20 21:00 GMT
ன்றும் அறியாத சிறுவனை 25 இடங்களில் அரிவாளால் வெட்டிக்கொன்றது மனிதாபிமானமற்ற செயல் என்று தனது தீர்ப்பில் நீதிபதி அப்துல்காதர் கூறியுள்ளார்.

163 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு

சிறுவன் தருண் மாதவ் கொலையில் ஆறுமுகம் என்பவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் நீதிபதி அப்துல்காதர் தனது தீர்ப்பு உரையை 163 பக்கங்களுக்கு வழங்கி உள்ளார்.

அதில் இந்த வழக்கு அரிதிலும், அரிதான வகையிலான, மனிதாபிமானமற்ற செயல் ஆகும்.

எந்த ஒரு பாவமும் அறியாத சிறுவனை 25 இடங்களில் வெட்டிக்கொலை செய்துள்ளதால் குற்றவாளிக்கு தூக்குதண் டனை விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

நீதிபதி அப்துல் காதர், இதற்கு முன்பு 2-வது கூடுதல் மாவட்ட செசன்சு கோர்ட்டு (தீண்டாமை தடுப்பு) நீதிபதியாக இருந்தார்.

அப்போது நெல்லை வண்ணார்பேட்டையில் காதல் பிரச்சினையில், காதலனின் அக்காள் கல்பனா வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் காதலியின் பெற்றோருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு வக்கீல் பேட்டி

தீர்ப்பு குறித்து போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் ராஜேசுவரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

எந்த வித முன்விரோதமும் அறியாத, 5 வயது சிறுவனை மனிதநேயமற்ற முறையில் ஆறுமுகம் வெட்டிக் கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் முதலாவது சாட்சியான தருண் மாதவின் தாய் பிரேமா, துணிச்சலாக நீதிமன்றத்தில் சரியாக சாட்சியம் அளித்தார். கொலை நடந்து 2 ஆண்டுகளுக் குள் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. குறிப்பாக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு விசாரணை தொடங் கப்பட்டு, விரைவாக விசாரித்து நீதிபதி தீர்ப்பை வழங்கி உள்ளார். இந்த தீர்ப்பு நீதித்துறையில் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இதன்மூலம் சட்டத்தின் மீதும், நீதித்துறையின் மீதும் மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்படும்.

இவ்வாறு ராஜேசுவரன் கூறினார்.

மேலும் செய்திகள்