நாமக்கல் அருகே சரக்கு வேன் மோதி விவசாயி பரிதாப சாவு

நாமக்கல் அருகே, மொபட் மீது சரக்கு வேன் மோதி விபத்துக்கு உள்ளானதில் விவசாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

Update: 2018-03-19 22:15 GMT
மோகனூர்,

நாமக்கல் அருகே என்.புதுப்பட்டியை அடுத்து உள்ள குப்பம்பாளையத்தை சேர்ந்தவர் பொம்மிநாயக்கர் (வயது 52), விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு மொபட்டில் வளையப்பட்டிக்கு சென்று விட்டு மீண்டும் என்.புதுப்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது இவருக்கு பின்னால் வந்த சரக்கு வேன் ஒன்று இவருடைய மொபட் மீது மோதியது.

பரிதாப சாவு

இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த பொம்மிநாயக்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இந்த விபத்து குறித்து பொம்மிநாயக்கரின் அண்ணன் சூரப்பநாயக்கர் (60), மோகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு சரக்கு வேனை சம்பவ இடத்தில் நிறுத்திவிட்டு தப்பிச்சென்ற டிரைவர் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் இறந்து போன பொம்மிநாயக்கருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். 

மேலும் செய்திகள்