தமிழ்மொழி குறித்து பேசும் ராகுல்காந்தி கர்நாடகாவிடம் தண்ணீரை திறந்து விட சொல்ல தயங்குவது ஏன்? டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி
தமிழ்மொழி குறித்து பேசும் ராகுல்காந்தி, கர்நாடகாவிடம் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட கூற தயங்குவது ஏன்? என்று தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.
கோவை,
பாரதீய ஜனதா மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கோவை விமானநிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை. இதனை ப.சிதம்பரம் கொச்சைப்படுத்த வேண்டாம். ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை தெரியாதவரா ப.சிதம்பரம்?. 3 மாதங்களில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் இருந்து இந்தியா மீண்டு இருக்கிறது. நோட்டை எண்ண அதிகமான அனுபவம் வேண்டும் என்றால் திகார் சிறையில் உள்ள கார்த்திக் சிதம்பரத்திடம் கொடுத்து எண்ண சொல்லலாம். பாரதீய ஜனதா, அ.தி.மு.க.வை இயக்குகின்றது என்று சொல்வது தவறு.
இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்ட போது, ஆட்சியில் இருந்த தி.மு.க. ஏன் அப்போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையை சேர்ந்த மந்திரிகள் பணிகளை தொடங்கிவிட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இன்னும் கால அவகாசம் இருக்கின்றது. கால அவகாசம் முடியும் வரை காத்திருப்பது என்ற தமிழக அரசின் முடிவு சரியானது. 29-ந் தேதிக்குள் மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்போம் என்ற துணை முதல்-அமைச்சரின் கருத்து எதார்த்தமானது.
காவிரி மட்டுமல்ல, கோதாவரியும் தமிழகம் வரும். அதுதான் பாரதீய ஜனதாவின் திட்டம். அழகிய தமிழ் மொழி பற்றி பேசும் ராகுல் காந்தி, தமிழ் மக்களுக்கு வஞ்சனை இன்றி தண்ணீரை திறந்து விடுங்கள் என கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவிடம் ஏன் கூறவில்லை?. இதில் தயக்கம் ஏன்?. இலங்கையில் தமிழ் மக்களை கொன்றதும், மொழிப்போர் தியாகிகளை கொன்றதும் காங்கிரஸ் கட்சிதான். இலங்கையில் தமிழர்களை கொலை செய்ததை தடுக்காத ராகுல்காந்தி அரசியல் பிழைப்பிற்காக தமிழ் மொழி குறித்து பேசுகின்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.