மும்பை மாநகராட்சி ஊழியரிடம் தங்கச்சங்கிலி, பொருட்களை பறித்த 4 பேர் கைது ரோந்து போலீசார் விரட்டி பிடித்தனர்

மாநகராட்சி ஊழியரை தாக்கி தங்கச்சங்கிலி், பொருட்களை பறித்துச்சென்ற 4 பேரை ரோந்து போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர்.

Update: 2018-03-18 22:21 GMT
மும்பை,

மாநகராட்சி ஊழியரை தாக்கி தங்கச்சங்கிலி், பொருட்களை பறித்துச்சென்ற 4 பேரை ரோந்து போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர்.

மாநகராட்சி ஊழியர்

மும்பை மாநகராட்சியில் ஊழியராக பணிபுரிந்து வருபவர் சந்திரமணி (வயது39). இவர் நேற்று அதிகாலை 1.30 மணி அளவில் சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு பல்டான் ரோடு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். வழியில் சந்தேகப்படும் வகையில் 4 பேர் நின்று கொண்டிருந்ததை கவனித்த சந்திரமணி வேகமாக நடையை கட்டினார்.

இந்தநிலையில் அவரை பின் தொடர்ந்து வந்த 4 பேரும் திடீரென அவரை தாக்கிவிட்டு அவர் வைத்திருந்த சூட்கேஸ், ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலி மற்றும் செல்போன், பணப்பை ஆகியவற்றை பறித்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடினர்.

4 பேர் கைது

இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திரமணி அந்த வழியாகவந்த ரோந்து போலீசாரிடம் சம்பவத்தை கூறினார். உடனே போலீசார் கொள்ளை கும்பலை சேர்ந்த 4 பேரையும் விரட்டிச்சென்று பிடித்தனர். மேலும் அவர்களிடம் இருந்து பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து போலீசார் பிடிபட்ட 4 பேரையும் எம்.ஆர்.ஏ. போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த கும்பலை சேர்ந்த முகமது சேக் (27) உள்பட 4 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்