புகைப்பிடிப்பதன் தீமைகள் குறித்த விழிப்புணர்வு ஸ்கேட்டிங் ஊர்வலம்

தூத்துக்குடி ஜே.சி.ஐ. அமைப்பு சார்பில் புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஸ்கேட்டிங் ஊர்வலம் நேற்று நடந்தது.

Update: 2018-03-18 20:30 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி ஜே.சி.ஐ. அமைப்பு சார்பில் புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஸ்கேட்டிங் ஊர்வலம் நேற்று நடந்தது. தூத்துக்குடி ரோச் பூங்கா முன்பு இருந்து தொடங்கிய ஊர்வலத்தை ஓய்வு பெற்ற நீதிபதி சங்கரநாராயணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வக்கீல் சொர்ணலதா முன்னிலை வகித்தார். ஊர்வலம் ரோச் பூங்காவில் இருந்து பீச் ரோடு வழியாக பனிமயமாதா ஆலயம் முன்பு முடிவடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கழுத்தில் தொங்கவிட்டபடி ஸ்கேட்டிங் செய்தனர்.

ஊர்வலத்தில் கலந்துகொண்ட மாணவ- மாணவிகளுக்கு ஜே.சி.ஐ. தலைவர் ஸ்டீபன் டார்வின் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் கிருஷ்ணவேணி, பட்டைய தலைவர் ராஜேஷ், அனிதா, சுதா, ஈசுவரி, டாக்டர் ராஜேசுவரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்