பாளை.சக்தி நாராயண ஜோதிபதி தாங்கலில் கருட வாகனத்தில் அய்யா வைகுண்டர் வீதி உலா

பாளையங்கோட்டை சக்தி நாராயண ஜோதிபதி தாங்கலில் திருஏடு வாசிப்பு திருவிழாவையொட்டி கருடவாகனத்தில் அய்யா வைகுண்டர் வீதி உலா நடந்தது.

Update: 2018-03-18 20:30 GMT
நெல்லை,

பாளையங்கோட்டை சக்தி நாராயண ஜோதிபதி தாங்கலில் திருஏடு வாசிப்பு திருவிழாவையொட்டி கருடவாகனத்தில் அய்யா வைகுண்டர் வீதி உலா நடந்தது.

திருஏடு வாசிப்பு

பாளையங்கோட்டை சக்தி நாராயண ஜோதிபதி தாங்கல் உள்ளது. இங்கு அய்யா வைகுண்டர் திருஏடு வாசிப்பு திருவிழா கடந்த 9-ந்தேதி காலை 9 மணிக்கு தொடங்கியது. அன்று இரவு 9 மணிக்கு உகப்பெருக்கும், பணிவிடையும், அன்னதர்மமும் நடந்தது. தினமும் காலையிலும், மாலையிலும் ஏடு வாசிப்பு நடந்தது.

கடந்த 16-ந்தேதி இரவு 7 மணிக்கு உகப்பெருக்கும், பணிவிடையும், இரவு 10 மணிக்கு திருகல்யாண ஏடு வாசிப்பும், இரவு 11 மணிக்கு அன்னவாகனத்தில் அய்யா வைகுண்டர் வீதி உலாவும், அன்னதானமும் நடந்தது.

கருட வாகனத்தில்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை 6 மணிக்கு பட்டாபிஷேக ஏடு வாசிப்பும், திருவிளக்கு பூஜையும் நடந்தது. இரவு 8-30 மணிக்கு மேள தாளம் முழங்க கருட வாகனத்தில் அய்யா வைகுண்டர் வீதி உலா நடந்தது. அப்போது ஏராளமான பெண்கள் கும்மியடித்து அய்யாவை வழிபட்டனர். இரவு 10 மணிக்கு உகப்பெருக்கும், அன்னதானமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்