ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி கோவில்பட்டியில் 27-ந்தேதி சாலைமறியல் அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் முடிவு
ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி, கோவில்பட்டியில் வருகிற 27-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சாலைமறியல் போராட்டம் நடத்துவது என்று அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கோவில்பட்டி,

ஆலோசனை கூட்டம்
கோவில்பட்டி ஐ.என்.டி.யு.சி. அலுவலகத்தில் அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நேற்று காலையில் நடந்தது. அனைத்துலக சாதி சமய நல்லிணக்க பண்பாட்டு கழகம், 5-வது தூண் தலைவர் சங்கரலிங்கம் தலைமை தாங்கினார்.
ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் தமிழரசன், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகரன், ஏ.ஐ.சி.சி.டி.யு. மாவட்ட செயலாளர் பொன்ராஜ், அண்ணா தொழிற்சங்க தாலுகா செயலாளர் ராமகிருஷ்ணன், பூலித்தேவர் மக்கள் இயக்க தலைவர் செல்வம், தொ.மு.ச. தலைவர் விஜயபாண்டியன், சங்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
27-ந்தேதி, சாலைமறியல்
கூட்டத்தில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, கோவில்பட்டி நகரின் மத்தியில் ஓடும் நீர்வரத்து ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுவதுமாக அகற்ற வலியுறுத்தி, பல்வேறு அறவழி போராட்டங்களை நடத்தியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி, வருகிற 27-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள், சமூக அமைப்புகள் சார்பாக சாலைமறியல் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.