ரூ.44.15 கோடியில் கட்டப்பட்ட ரெயில்வே மேம்பாலம் முதல்-அமைச்சர் 25-ந் தேதி திறந்து வைக்கிறார்
பள்ளிபாளையத்தில் ரூ.44.15 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ரெயில்வே மேம்பாலத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 25-ந் தேதி திறந்து வைக்கிறார். இதையொட்டி திறப்பு விழா காணும் பாலத்தை அமைச்சர் தங்கமணி ஆய்வு செய்தார்.
பள்ளிபாளையம்,
நாமக்கல் மாவட்டத்தில், திருச்செங்கோடு-பள்ளிபாளையம் செல்லும் வழியில் எஸ்.பி.பி. காலனி பகுதியில் தற்போது ரெயில்வே கீழ்பாலம் உள்ளது. இந்த பகுதியில் பல்வேறு கல்லூரிகள் இருப்பதாலும், நாமக்கல்லில் இருந்து ஈரோடு செல்வதற்கான முக்கிய சாலையாக இருப்பதாலும், போக்குவரத்து அதிகம் உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது.
போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் வகையில் இப்பகுதியில் தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் ரூ.44.15 கோடி மதிப்பீட்டில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலமானது அதிகபட்சமாக 11 மீட்டர் உயரமும், 670 மீட்டர் நீளமும், வாகனப்போக்குவரத்திற்கு 11 மீட்டர் அகலமும் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது.
முடிவுற்ற பாலப்பணிகளை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது பள்ளிப்பாளையம் நோக்கி உள்ள சாலை பகுதியில் இருந்து பாலத்தின் மீது நடந்து வந்து எஸ்.பி.பி காலனி பகுதியில் முடிவடையும் பகுதிவரை சென்று அமைச்சர் ஆய்வு செய்தார். பாலம் மற்றும் இணைப்பு சாலை பணிகள் சரியாக மேற்கொள்ளப்பட்டுள்ளதை சரிபார்த்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலை போக்கும் வகையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் ரூ.44.15 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வருகிற 25-ந் தேதி மாலை 3 மணியளவில் இந்த மேம்பாலத்தையும், வெப்படையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புதிய போலீஸ் நிலையத்தையும் திறந்து வைக்கிறார்.
மேலும் அன்றைய தினம் சேசாயி பேப்பர் மில் அருகில் ரெயில் நிலையப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூ.22.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள ரெயில்வே கீழ்பாலம் பணிக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார். இந்த மூன்று நிகழ்ச்சிகளும் எஸ்.பி.பி காலனி அருகில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது.
இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். முன்னதாக பள்ளிபாளையம் நெடுஞ்சாலைத்துறை பயணியர் மாளிகையில், மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம், போலீஸ் சூப்பிரண்டு அருளரசு மற்றும் வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்பட அனைத்துதுறை அலுவலர்களுடன், முதல்-அமைச்சரின் வருகை குறித்த முன்னேற்பாட்டு பணிகள் குறித்து அமைச்சர் தங்கமணி ஆலோசனை செய்தார்.
இந்த ஆலோசனையில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராமசாமி, திருச்செங்கோடு கோட்டாட்சியர் பாஸ்கரன், குமாரபாளையம் தாசில்தார் ரகுநாதன், பள்ளிபாளையம் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் எஸ்.செந்தில், பள்ளிபாளையம் முன்னாள் நகர்மன்ற தலைவர் பி.எஸ்.வெள்ளியங்கிரி மற்றும் கூட்டுறவாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் மேம்பாலம் திறப்பு விழா நடைபெற உள்ள எஸ்.பி.பி காலனி பகுதியில் உள்ள மைதானத்தையும் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.